• Mon. Jun 29th, 2026

24×7 Live News

Apdin News

இரண்டாவது டி20 போட்டியிலும் வைபவ் சூர்யவன்ஷிக்கு இடமில்லை

Byadmin

Jun 28, 2026


சர்வதேச  டி20 போட்டிகள், வைபவ் சூர்யவன்ஷி, கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் அணி, கிரிக்கெட் போட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சர்வதேசப் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வைபவ் சூர்யவன்ஷி எவ்வாறு மேலும் மெருகேற்றிக்கொள்ளப் போகிறார் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டி20 போட்டியிலும் வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமையன்று (2026 ஜூன் 28) நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அணியில் பந்துவீச்சாளர் பிரின்ஸ் யாதவ் மற்றும் ஆல்-ரவுண்டர் சூர்யான்ஷ் ஷெட்கே என இரண்டு வீரர்கள் அறிமுகமாகியுள்ளனர்.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

இந்தியாவின் இளம் மற்றும் அதிரடி ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி முந்தைய போட்டிக்கான அணியில் சேர்க்கப்படாதபோது, ​​பல கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். இரு நாடுகளுக்கும் இடையே நடந்த முதல் போட்டியில் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், பல கிரிக்கெட் நிபுணர்கள் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த முடிவை ஆதரித்துப் பேசியிருந்தனர்.

By admin