• Mon. Jun 29th, 2026

24×7 Live News

Apdin News

2வது போட்டியிலும் வெற்றி… இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது அயர்லாந்து

Byadmin

Jun 28, 2026


அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற்றது.

பெல்ஃபாஸ்ட் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணியின் இந்த இரண்டாவது போட்டியிலும் சூர்யவன்ஷி இடம்பெறவில்லை. தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் அயர்லாந்தும், தொடரை சமன் செய்யவேண்டும் என்ற நோக்கில் இந்திய அணி களமிறங்கியது.

அயர்லாந்து பேட்டிங்:

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய வந்த அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 154 ரன்களை எடுத்தது. அயர்லாந்து சார்பில் ஹேரி டெக்டர் 47 பந்துகளில் 53 ரன்களை விளாசினார். பென் கலிட்ஸ் 23 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார்.

இந்திய அணி சார்பில் பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஷிவம் துபே தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 1 விக்கெட் கைப்பற்றினார்.

இந்திய அணி சொதப்பல்:

155 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா மற்றும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர்.

அடுத்து களமிறங்கிய இஷான் கிஷான், ஸ்ரேயஸ் அய்யர் முறையே 12 மற்றும் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். திலக் வர்மா சிறப்பாக ஆடி 55 ரன்களை விளாசினார்.

அயர்லாந்து வெற்றி:

அடுத்தடுத்து களமிறங்கிய அக்சர் படேல் (14), ஷிவம் துபே (20), ஹர்ஷித் ராணா (21) எடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால் அயர்லாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அயர்லாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜெய் மூந்த்ரா, மேட் ஹொல்லார்டு தலா 3 விக்கெட்டுகளையும், மேத்யூ ஹம்ப்ரெஸ் மற்றும் ஹாரி டெக்டர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

By admin