• Wed. Apr 22nd, 2026

24×7 Live News

Apdin News

இரானுடன் போர் நிறுத்தம் நீட்டிப்பு – டிரம்புக்கு நன்றி கூறிய பாகிஸ்தான்

Byadmin

Apr 22, 2026


டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க இரானுடனான போர் நிறுத்தத்தை அமெரிக்கா நீட்டிப்பதாக கூறியுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானிய துறைமுகங்களில் முற்றுகை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “இரான் அரசாங்கம் எதிர்பாராத வகையில் மிகத் தீவிரமாகப் பிளவுபட்டுள்ளது என்ற உண்மையின் அடிப்படையிலும், பாகிஸ்தானின் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஆகியோரின் கோரிக்கையின் பேரிலும், இரான் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒரு ஒருங்கிணைந்த முன்மொழிவை முன்வைக்கும் வரையில், அந்நாட்டின் மீதான எங்களது தாக்குதலை நிறுத்திவைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளோம்.

எனவே, நமது ராணுவம் முற்றுகையைத் தொடரவும், மற்ற அனைத்து அம்சங்களிலும் தயார் நிலையிலும் திறனுடனும் இருக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். அத்துடன், அவர்களின் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் எவ்வகையிலாயினும் நிறைவடையும் வரையில், நான் போர்நிறுத்தத்தை நீட்டிக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் நன்றி

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் உடன் டிரம்ப்

பட மூலாதாரம், Harun Ozalp/Anadolu via Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் உடன் டிரம்ப் (கோப்புப்படம்)

போர் நிறுத்தத்தை நீட்டித்ததற்கு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் டிரம்புக்கு நன்றி தெரிவித்தார்.

ஷெபாஸ் ஷெரீஃப் தன் எக்ஸ் தளத்தில், “எங்கள் கோரிக்கையை ஏற்று, ராஜீய ரீதியிலான முயற்சிகள் முன்னோக்கிச் செல்ல ஏதுவாக போர் நிறுத்தத்தை நீட்டித்த அதிபர் டிரம்புக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று எழுதினார்.

By admin