• Wed. Apr 22nd, 2026

24×7 Live News

Apdin News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் | யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

Byadmin

Apr 22, 2026


2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் தேவாலயங்கள் உட்பட சில இடங்களில்  இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 7ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பல இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். மறை மாவட்டத்தில், மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணத்தின் ஒழுங்குபடுத்தலில் ஆயர் இல்ல சிற்றாலய முன்றலில் நினைவேந்தல் நடைபெற்றது.

சிற்றாலய முன்றலில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் சுடரேற்றப்பட்டு வழிபாடும் அஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அடிகளாரின் அஞ்சலி உரையும் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், இறைமக்கள் பலரும் கலந்துகொண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றுக்காக பிரார்த்தனை செய்தனர்.

By admin