• Fri. Apr 24th, 2026

24×7 Live News

Apdin News

இரான் 40 ஆண்டுகளாக பொருளாதாரத் தடைகளில் இருந்தும் டிரோன் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தது எப்படி?

Byadmin

Apr 24, 2026


ஷாஹெட் 136 ட்ரோன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷாஹெட் 136 டிரோன் என்பது இரானியத் தொழில்துறையால் உருவாக்கப்பட்ட சமீபத்திய தொழில்நுட்பமாகும்.

இரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேல் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், ராணுவ நிபுணர் அக்ரம் காரிஃப் எழுதிய ‘ஷாஹித்தின் நிழலில்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், இரானின் டிரோன் தொழில்துறையின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து அவர் ஆராய்கிறார். மேலும், அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ளவும், உலகளாவிய ராணுவத் தொழில்துறையில் ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக மாறவும் இரானுக்கு உதவிய அதன் உத்திகளை விரிவாக விளக்குகிறார்.

இஸ்ரேல் எல்லைப் பகுதியில் ஹெஸ்பொலா அமைப்பினரின் செயல்பாடுகள் குறித்த ராணுவ அறிக்கைகளில் இரானிய டிரோன்கள் முதன்முதலில் குறிப்பிடப்பட்டன.

பின்னர், ஏமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்திய டிரோன்களின் சிதைந்த பாகங்களை ஆய்வு செய்த பிறகு, அவை இரானியத் தயாரிப்புடன் தொடர்புடையவை என்பது கண்டறியப்பட்டது.

ஆனால் செப்டம்பர் 2022-இல், இரான் ரஷ்ய ராணுவத்திற்கு டிரோன் தொழில்நுட்பத்தை வழங்குகிறது என்ற அதிர்ச்சியூட்டும் செய்தியை உலகம் அறிந்தது.

By admin