• Sat. Oct 3rd, 2026

24×7 Live News

Apdin News

இருமல், தும்மல் அல்லது சத்தமாக சிரித்தால் சிறுநீர் கசிகிறதா? பெண்கள் கவனிக்க வேண்டிய 6 முக்கிய விஷயங்கள்

Byadmin

Oct 3, 2026


இருமல், தும்மல் அல்லது சத்தமாக சிரித்தால் சிறுநீர் கசிகிறதா? பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

    • எழுதியவர், ஓம்கார் கரம்பேல்கர்
    • பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

சில பெண்கள் எங்கு செல்வதாக இருந்தாலும் பயத்துடனேயே இருக்கிறார்கள். இவ்வளவு நீண்ட பயணத்தின்போது அவர்களால் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியுமா? என்பதுதான் அவர்களின் மனதில் முதலில் எழும் கேள்வி.

நீங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது இருமினாலோ அல்லது தும்மினாலோ திடீரென சிறுநீர் வெளியேறி கட்டுப்பாட்டை இழக்கிறீர்களா? சில நேரங்களில் படிக்கட்டுகளில் ஏறும்போதோ அல்லது சத்தமாக சிரிக்கும் போதோ சிறுநீர் வெளியேறுகிறது.

இதுபோன்ற பிரச்னையைப் பல பெண்கள் எதிர்கொள்கிறார்கள். அதன்பிறகு, அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்கும்போதுகூட சிறுநீர் வெளியேறிவிடுமோ என்ற உணர்வு ஏற்படுகிறது.

அதன்பிறகு அத்தகைய பெண்கள் இந்தச் செயல்களைத் தவிர்க்கத் தொடங்குகிறார்கள். ஆனால், பயம் மற்றும் வெட்கத்தின் காரணமாக, அவர்கள் அதைப் பற்றிப் பேசக்கூடத் தயாராக இருப்பதில்லை.

கர்ப்பம், குழந்தைப் பிறப்பு, மாதவிடாய் நிறுத்தம், முதுமை, உடல் பருமன் அல்லது நீரிழிவு போன்ற காரணங்களால் இடுப்புத் தளத் தசைகள் பலவீனமடையலாம். இதனால் சிறுநீரைக் கட்டுப்படுத்தும் திறன் பாதிக்கப்படலாம்.

By admin