• Sat. Oct 3rd, 2026

24×7 Live News

Apdin News

உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு

Byadmin

Oct 3, 2026


உக்ரைன்- ரஷியா இடையிலான போர் நான்கரை ஆண்டுகளை தாண்டி நடைபெற்று வருகிறது. போரை முடிவுக்கு கெண்டு வருவதற்கான தீர்க்கமான முடிவு இன்னும் எட்டப்படாமல் உள்ளது.

உக்ரைனின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் 1250 கி.மீ. நீளத்திற்கு சண்டை நடைபெற்று வருகிறது. சமீப மாதங்களாக எல்லையில் மிகப்பெரிய அளவில் சண்டை இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கீவ் நகரின் வடக்குப் பகுதியில் ரஷியா நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், போக்குவரத்திற்கு முக்கியமான டினிப்ரோ ஆற்றில் உள்ள வடக்கு சாலை பாலம் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஏற்கனவே பல சாலைகளை முழுமையாக அல்லது பகுதி நேரமாக ரஷியா மூடியுள்ளது. இந்த நிலையில் சாலையை சேதப்படுத்தியுள்ளது.

இந்த சாலை வழியாக உக்ரைன் ராணுவத்திற்கு தேவையான உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தன. தற்போதைய இந்த தாக்குதல் காரணமாக மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

By admin