• Fri. May 29th, 2026

24×7 Live News

Apdin News

இலங்கையில் தவெகவை தொடங்க விஜய்க்கு அழைப்பு – சாத்தியங்களும் வாய்ப்புகளும்

Byadmin

May 29, 2026


TVK, Politics, Tamilnadu, Srilanka, Political party

பட மூலாதாரம், TVKHQ

‘முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!’ என தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் எக்ஸ் தளத்தில் கடந்த 18ம் தேதி வெளியிட்ட கருத்து பேசுப் பொருளாகியுள்ளது.

விஜய், முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்துக்கொண்டதன் பின்னர் இலங்கை தமிழர்கள் குறித்து முதல் தடவையாக கருத்து வெளியிட்டிருந்தார்.

நடிகராக இருந்த காலத்தில் விஜய்க்கு சிங்கள மக்கள் மத்தியில் பெரும் ரசிகர் கூட்டம் இருந்தாலும், அரசியல் வாழ்க்கையில் பெரும்பாலான சிங்கள மக்கள் விஜய்க்கு எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

கச்சத்தீவை இந்தியாவிற்கு பெற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் பிரசார மேடைகளில் விஜய் கருத்துக்களை வெளியிட்ட பின்னரே, சிங்கள மக்கள் மத்தியில் விஜய்க்கு கடும் எதிர்ப்பு காணப்படுகின்றது.

அதேசந்தர்ப்பத்தில், கச்சத்தீவு விவகாரத்தில் விஜய்க்கு இலங்கை தமிழர்கள் மத்தியிலும் எதிர்ப்புக்கள் காணப்படுகின்றன. குறிப்பாக மீனவ சமூகம் விஜயின் இந்த கருத்துக்கு எதிர்ப்புக்களை கடந்த காலங்களில் வெளியிட்டிருந்தனர்.

By admin