கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் அரியலூர் வல்லிகுன்னு பகுதியை சேர்ந்தவர் நிதின் மோகன்தாஸ் (வயது25). இவர் சமூக வலைதள பக்கங்களில் இருந்து இளம்பெண்களின் புகைப்படத்தை எடுத்து, அவற்றை ஆபாசமாக சித்தரித்து இருக்கிறார்.
அவ்வாறு ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட இளம்பெண்களின் புகைப்படத்தை “டெலிகிராம்” உள்ளிட்டவற்றில் ஆன்லைன் குழுக்களில் விற்பனை செய்திருக்கிறார். அதில் ஒரு குழுவில் தனது பெண் நண்பரின் புகைப்படம் பரவுவதை வாலிபர் ஒருவர் பார்த்தார்.
அவர் அது குறித்து தன்னுடைய பெண் நண்பரிடம் தெரிவித்தார். கோழிக்கோடு மாவட்டம் ராமனாட்டுக்கரை பகுதியை சேர்ந்த அந்த இளம்பெண், அதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் பரப்பனங்காடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது வாலிபர் நிதின் மோகன்தாசின் அட்டூழியங்கள் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து போலீசார் சோதனை செய்து பார்த்தனர்.