• Fri. Oct 30th, 2026

24×7 Live News

Apdin News

இளைஞர்கள் புறக்கணிக்க கூடாத பக்கவாத அறிகுறிகள் எவை? 5 முக்கிய அம்சங்கள்

Byadmin

Oct 30, 2026


பக்கவாதம், ஆரோக்கியம், உடல்நலன்

படக்குறிப்பு, அறிகுறிகளைப் புறக்கணிப்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பக்கவாதம் என்பது முதியவர்களை மட்டுமே பாதிக்கும் நோய் என்று பலர் நம்புகின்றனர். இதன் அடிப்படையிலேயே, இளைஞர்களுக்குத் திடீரெனத் தலைசுற்றல், கை அல்லது கால்களில் உணர்வின்மை, பேசுவதில் சிரமம் அல்லது பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவற்றை பெரும்பாலும் அலட்சியப்படுத்திவிடுகின்றனர். ஆனால், இத்தகைய அறிகுறிகளைப் புறக்கணிப்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பக்கவாதம் என்பது முதியவர்களை மட்டுமே பாதிக்கும் நோய் அல்ல என்பதை உலகளாவிய புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 15 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களுக்கும் பக்கவாதம் ஏற்படலாம். இந்த வயதினரிடையே பக்கவாத பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மிக முக்கியமாக, பக்கவாத அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்துவச் சிகிச்சை பெறுவதில் ஏற்படும் தாமதம் மூளைச் செல்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால்தான், பக்கவாத சிகிச்சையில் “நேரமே மூளை” (Time is Brain) என்ற கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம் என்பதால், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும்.

அக்டோபர் 29 அன்று உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு, இளைஞர்களிடையே பக்கவாத அபாயம், பலராலும் கவனிக்கப்படாமல் போகும் அதன் ஆரம்ப அறிகுறிகள், உடனடி மருத்துவச் சிகிச்சையின் அவசியம் மற்றும் பக்கவாத அபாயத்தைக் குறைக்க நாம் இன்றிலிருந்தே கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் குறித்து அறிந்துகொள்வோம்.



By admin