• Sat. Oct 17th, 2026

24×7 Live News

Apdin News

இளையராஜா – ஏ.ஆர்.ரஹ்மான் நடுவே தனித்துவம் காட்டிய தேவா திரைப் பயணத்தில் 8 முக்கிய விஷயங்கள்

Byadmin

Oct 17, 2026


இசையமைப்பாளர் தேவா காலாமானார்.

படக்குறிப்பு, இசையமைப்பாளர் தேவா காலாமானார்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கடந்த 1980களின் இரண்டாவது பாதியில் தொடங்கிய இசையமைப்பாளர் தேவாவின் திரையிசைப் பயணம், 1990களிலும் 2000களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவின் மிகச் சிறப்பான இசைப் பயணங்களில் ஒன்றாக மாறியது. பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த தேவா, காதல் பாடல்கள், கானா, நாட்டுப்புற இசை, நாயகர்களுக்கான அறிமுகப் பாடல்கள், பின்னணி இசை என பல்வேறு இசை வடிவங்களில் தனது தடத்தைப் பதித்தார்.

1989ஆம் ஆண்டு வெளியான மனசுக்கேத்த மகாராசா திரைப்படத்தின் மூலம் வெளிச்சம் பெற்ற தேவா, பின்னர் மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் பரபரப்பான இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறினார்.

1990களில் தமிழ் சினிமாவில் ஒருபுறம் இளையராஜா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த, மறுபுறம் ஏ.ஆர். ரஹ்மானின் வருகை தமிழ் திரைப்பட இசையின் ஒலித் தரத்தையே மாற்றியிருந்தது. அந்தச் சூழலில்தான் தேவாவும் தனக்கென ஒரு பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கினார்.

இதை 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ‘தேவா தேவாதான்’ இசை நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தும் இதை குறிப்பிட்டுப் பேசியிருந்தார். தேவாவின் இசையில் இருந்த முக்கியமான தன்மை, ஒரே வகை இசைக்குள் அவர் தன்னை சுருக்கிக் கொள்ளாததுதான்.

கானாவும் தேவாவின் தனித்த அடையாளமும்

தனது இசைக்குழுவினருடன் தேவா.

படக்குறிப்பு, தனது இசைக்குழுவினருடன் தேவா.

திரைப்படங்களில் கானா பாடல்களை பரவலாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததில் தேவாவுக்கு முக்கியமான இடம் உண்டு.

By admin