• Tue. Jun 2nd, 2026

24×7 Live News

Apdin News

இளையராஜா – மணிரத்னம் கூட்டணியில் பிடித்த பாடல்களை பகிரும் 6 திரை பிரபலங்கள்

Byadmin

Jun 2, 2026


இளையராஜா, மணிரத்னம் கூட்டணியில் உருவான படங்கள்

பட மூலாதாரம், Facebook/ Maniratnam, X/Ilayaraja

    • எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ் சினிமாவில் இளையராஜா, மணிரத்னம் கூட்டணியில் பல ஹிட் படங்கள் வந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் மட்டுமே இந்த கூட்டணி நீடித்தது. ஆனாலும், அந்த பத்தாண்டை தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பார்கள். இவர்கள் இணைந்து பணியாற்றி படங்களின் பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசையும் இன்றும் கொண்டாடப்படுகிறது. இன்று இளையராஜா, மணிரத்னம் இருவருக்கும் பிறந்தநாள்.

இருவர் கூட்டணியில் வந்த படங்களில் உங்களுக்கு பிடித்த பாடல்கள் பற்றி பேச முடியுமா என்று திரை பிரபலங்களிடம் பிபிசி சார்பில் பேசினோம்.

Ilayaraja, Manirathnam, Birthday, songs, movies, MounaRagam

பட மூலாதாரம், RJS Music

படக்குறிப்பு, இளையராஜா இசையமைப்பில் மெளனராகம் திரைப்படத்தில் வெளியான மன்றம் வந்த தென்றலுக்கு பாடல்.

‘மன்றம் வந்த தென்றலுக்கு’ – சுகாசினி

நடிகையும், இயக்குனர் மணிரத்னம் மனைவியுமான சுகாசினி பிபிசி தமிழிடம், ” இதயகோயில் படத்தில் இடம் பெற்ற ‘வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்’ பாடல் பிடிக்கும். அதேபோல், மெளனராகம் படத்தில் வரும் ‘மன்றம் வந்த தென்றலுக்கு…மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ…அன்பே என் அன்பே…’ என்ற பாடல் ரொம்ப இஷ்டம்.

அடுத்ததாக, அக்னிநட்சத்திரம் படத்தில் வாலி எழுதிய நின்னுக்கோரி வர்ணம் பாடலை பலமுறை ரசித்து கேட்டு இருக்கிறேன். தளபதி படத்தில் வரும் ‘சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே’ ரொம்பவே டச்சிங் ஆன பாடல். இந்த பாடல்களை போலவே, நாயகனில் இடம் பெற்ற ‘தென்பாண்டிசீமையிலே’ மிக மிக விருப்பமான பாடல்.” என்கிறார்.

‘இந்த கூட்டணி தோற்றதே இல்லை’ – கேபிள் சங்கர்

Ilayaraja, Manirathnam, Birthday, songs, movies, Thalapathi

பட மூலாதாரம், Ayngaran

படக்குறிப்பு, மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த், மம்முட்டி நடித்த தளபதி திரைப்படம்

மணிரத்னம், இளையராஜா கூட்டணி குறித்து நடிகர், இயக்குனர், இசை விமர்சகருமான கேபிள் சங்கர், ”தமிழ்சினிமாவில் அந்த பத்தாண்டு திரும்ப வராதா என்று சொல்லும் அளவுக்கு இரண்டு பேரும் முத்திரை பதித்து இருக்கிறார்கள். மணிரத்னம் படங்களுக்கு முன்பு இளையராஜா ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்து இருந்தாலும், தனித்துவமான பின்னணி இசையை தந்து இருந்தாலும் மணிரத்னம் படங்களுக்கு அதிலிருந்து மாறுபட்டு அல்லது புதுமையான இசையை கொடுத்தார் என்ற சொல்லலாம்.

By admin