அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளின் கூட்டு ஆதரவில் ஐ.நா. சபையில் தீர்மானம் ஒன்று பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அதன்படி கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரத்தை அனுமதிக்காவிட்டால் ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அந்த தீர்மானத்தில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களையும், சட்டவிரோத சுங்கவரிகள் விதிப்பையும் நிறுத்த வேண்டும். கப்பல் போக்குவரத்தை அனுமதிக்கும் வகையில் அனைத்து கண்ணிவெடிகளின் இருப்பிடத்தையும் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அந்த தீர்மானம் முன்மொழிவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.