• Wed. Jul 22nd, 2026

24×7 Live News

Apdin News

ஈரோடு: இரண்டாவதும் பேத்தி பிறந்ததால் குழந்தையை கொன்ற பாட்டி

Byadmin

Jul 22, 2026


சமூக நலத் துறை, பெண் சிசுக் கொலை

பட மூலாதாரம், Puneet Vikram Singh/Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் இருக்கும் தகவல்கள் சங்கடம் தரலாம்

சேலத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன் மகளுக்கு இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் பிறந்த 18 மணி நேரத்துக்குள் குழந்தையைக் கொலை செய்துள்ளார். குழந்தை மூச்சுத்திணறி இறந்து விட்டதாகக் கூறி, உண்மையை மறைக்க நினைத்த நிலையில், மருத்துவர் சந்தேகமடைந்து அவருக்குத் தெரியாமல் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

காவல்துறை விசாரணையில் குழந்தையைக் கொன்ற அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது மகளுக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், இரண்டாவதும் பெண்ணாகப் பிறந்ததால் தன் மகளால் வளர்க்க முடியாமல் கஷ்டப்படுவாள் என்று கருதி கொலை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கென்று பல்வேறு சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வரும் நிலையில், இந்தச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கென்று இருக்கும் பொதுவான சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் மகளிர் நலத்திட்டங்களால், பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களைத் தடுக்க முடியாது என்கிறார் மகளிர் உரிமை செயற்பாட்டாளர் தாரா கிருஷ்ணசாமி.

By admin