• Tue. Aug 4th, 2026

24×7 Live News

Apdin News

உதயநிதி கைது: திமுக என்ன செய்யும்? அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்துமா?

Byadmin

Aug 4, 2026


உதயநிதி கைது: திமுக என்ன செய்யும்? அரசியல்ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்துமா?

தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி மீது 9 பிரிவுகளில் தஞ்சை கிழக்குக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க் கிழமை காலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் உதயநிதியை கைது செய்த தஞ்சை காவல்துறை, வாகனம் மூலமாக அவரை விசாரணைக்குக் கூட்டிச் சென்றனர். தஞ்சாவூர் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் காவல் நிலைய ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்

உதயநிதி கைதைக் கண்டித்து தி.மு.கவினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

“புதன்கிழமை சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அவர் பங்கேற்றுவிடக் கூடாது’ என்பதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக, தி.மு.க விமர்சித்துள்ளது.

“கைது சம்பவத்தை முன்வைத்து அரசியல் ரீதியாக பலனைப் பெறும் முயற்சியில் தி.மு.க இறங்கலாம்” என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

By admin