• Tue. Jun 23rd, 2026

24×7 Live News

Apdin News

உதயநிதி பேரவையில் எழுப்பிய குற்றச்சாட்டுகளும் அமைச்சர்களின் பதில்களும்

Byadmin

Jun 23, 2026


தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

பட மூலாதாரம், TNAssembly/Youtube

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் திங்கட்கிழமை நடைபெற்ற போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினார். அதற்கு, பல்வேறு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது உரை ஆரம்பிக்கும் முன் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து தொடங்கினார்.

உதயநிதியின் உரையின் தொடக்கத்தில், “தவெக ஆட்சி அமைந்து சரியாக 40 நாட்கள் கடந்துள்ளது, ஆளுநர் உரையை கேட்கும்போது 40 நாட்களில் இந்த அரசு என்னென்ன பணிகள் செய்துள்ளது, திட்டங்கள் கொண்டு வந்தார்கள், ஏதேனும் சாதனைகள் செய்தார்களா என்பதை தெரிந்துகொள்ள ஆவலோடு காத்திருந்தோம், ஆனால் ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது” என்று தெரிவித்தார்.

“நம்பிக்கை வாக்கெடுப்பின் போதே நான் தெரிவித்தேன், ஆளுநர் உரை நிகழ்த்தும்போது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுங்கள் என்றேன், அதேபோல் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டாலும், இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது, இது மரபு மீறல்” என்று அவர் கூறினார்.

அதற்கு பதில் அளித்த சட்டப்பேரவை தலைவர், “ஆளுநர் உரையின்போது தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்ற அரசின் உறுதியான கொள்கையில் இந்த அவை நின்றதா என்பதை பார்க்க வேண்டும், தேசிய கீதத்தை இரண்டு முறை பாடியதில் என்ன தவறு என்று எனக்கு தெரியவில்லை, அப்படி பாடப்பட்டதில் என்ன தவறு, எந்த அடிப்படையில் தவறு என்று சொல்ல வருகிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

By admin