• Tue. Jul 14th, 2026

24×7 Live News

Apdin News

உராகாசாரஸ் கலாசினென்சிஸ்: கிரிக்கெட் பிட்ச் அளவுக்கு நீளமான புதிய டைனோசர் இனம் தாய்லாந்தில் கண்டுபிடிப்பு

Byadmin

Jul 14, 2026


ஓவியம்: பாகோர்ன் சோட்சையாபார்ன்

பட மூலாதாரம், Artwork by Pakorn Chotchaiyaporn

படக்குறிப்பு, ஓவியம்: பாகோர்ன் சோட்சையாபார்ன்

    • எழுதியவர், ஏமி வாக்கர்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கலாசின் மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்ட புதைபடிவங்களின் அடிப்படையில், புதிய வகை டைனோசர் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக தாய்லாந்து தொல்லுயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘உராகாசாரஸ் கலாசினென்சிஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தாவர உண்ணி டைனோசர், சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.

இது வழக்கத்திற்கு மாறாக நீண்ட கழுத்தைக் கொண்டிருந்ததுடன், சுமார் 20 மீட்டர் (66 அடி) நீளம் வரை வளர்ந்திருந்தது. இது ஒரு கிரிக்கெட் பிட்சின் நீளத்திற்கு சமமாகும்.

தாய்லாந்தின் மகாசரகாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் அபிருத் நில்பனபன் பிபிசி தாய் சேவையிடம், இந்த டைனோசரின் புதைபடிவங்கள் மிகப்பெரிய புதைபடிவத் தொகுப்பின் ஒரு பகுதியாக இருந்ததாக தெரிவித்தார்.

இந்தப் புதைபடிவங்கள் கிடைத்த இடமான பூ நொய் பகுதி, 2008ஆம் ஆண்டு முதலில் கண்டறியப்பட்டது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பாம்பின் செதில்கள் போன்ற தோற்றம் கொண்ட சில துண்டுகளைக் கண்டுபிடித்தார்.

By admin