ஏழைகள் வெளியேற்றம்
அரசின் இந்த வெளியேற்ற நடவடிக்கையில் இதுவரை 2,600 குடும்பங்களைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் வாழ்விடங்களை இழந்துள்ளனர்.
தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 150க்கும் மேற்பட்ட ஏழை மக்கள் வசதிகள் செய்து தரப்படாததால் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
போராட்டம்
கணேஷ் நேபாளி தற்கொலை மற்றும் வீடற்றவர்கள் வெளியேற்றம் ஆகியவற்றால் கொந்தளித்த இளைஞர்கள் மீண்டும் வீதிக்கு வந்து போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
“ஏழைகளுக்கு எதிரான அத்துமீறலை நிறுத்து”, “மனித உரிமைகளை மதித்திடு” போன்ற முழக்கங்களுடன் தலைநகர் காத்மாண்டுவில் அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள அரண்மனை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாலேந்திர ஷா அரசின் செயல்பாடுகள் குறித்து பாராளுமன்ற கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.
மீண்டும் ஜென் இசட்
கடந்த ஆண்டு செப்டம்பரில் அப்போதைய பிரதமர் கே.பி. சர்மா ஒலியைப் பதவி விலகச் செய்த அதே ஜென் இசட் அமைப்பினர் மீண்டும் களமிறங்கியுள்ளனர்.
தற்காலிக முகாம்களில் உள்ள ஏழைகளின் நிலையை ஆய்வு செய்யச் சென்ற இளைஞர் நல ஆர்வலர்கள் மீது போலீசார் தடியடி நடத்திக் கைது செய்தனர். இதில் ஒருவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த விவகாரங்கள் குறித்து விசாரிக்க நேபாள அரசு, டிஐஜி கோவிந்த தபலியா தலைமையில் 5 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.