• Tue. Jul 14th, 2026

24×7 Live News

Apdin News

இ20 பெட்ரோல்: இந்தியாவில் அதிக விலை கொடுப்பது யார்? முழு பின்னணி

Byadmin

Jul 14, 2026


இந்தியா, எரிபொருள், இ20 எரிபொருள் கலவை, தரப்படுத்தப்பட்ட பெட்ரோல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எத்தனால் கலந்த பெட்ரோல் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தங்களின் வாகனங்களின் என்ஜின் தேய்மானம், மைலேஜ் குறைவு மற்றும் செயல்திறன் குறைபாடு போன்ற புகார்களை நுகர்வோர் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது சந்தையில் உள்ள பெரும்பாலான வாகனங்கள், 10% எத்தனால் மட்டுமே கொண்ட பெட்ரோலைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டவை என்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில், இ20 திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பு ஏன் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

இந்தத் திட்டம் 2030ஆம் ஆண்டில் தான் செயல்படுத்தப்படவிருந்தது, அப்படியிருக்க ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ஏன் இது அவசரமாகச் அமல்படுத்தப்பட்டது? என்ற விவாதங்கள் சூடுபிடித்ததைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை பெட்ரோலிய அமைச்சகம் சில வாகனங்களின் மைலேஜ் 3 முதல் 5 சதவீதம் வரை குறையக்கூடும் என்பதை ஒப்புக்கொண்டது. இருப்பினும், வாகனங்களின் என்ஜின் அல்லது அதன் செயல்திறனில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும், எத்தனால் கலப்புத் திட்டம் முற்றிலும் பாதுகாப்பானது என்றும் அரசு கூறுகிறது.

By admin