• Tue. Jul 21st, 2026

24×7 Live News

Apdin News

உலகக் கோப்பை வென்ற ஸ்பெயின் கால்பந்தில் புதிய பேரரசாக மாறியது எப்படி?

Byadmin

Jul 20, 2026


கால்பந்தில் ஸ்பெயின் ஓர் ஆதிக்க சக்தியாக விளங்குவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நீல் ஜான்ஸ்டன்
    • பதவி, பிபிசி ஸ்போர்ட் செய்தியாளர், நியூயார்க்கிலிருந்து
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஸ்பெயின் மீண்டும் சாதித்துக் காட்டியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெர்லினில் ஐரோப்பிய சாம்பியன்களாக முடிசூட்டப்பட்டதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நியூ ஜெர்சியில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் தோற்கடித்து ஸ்பெயின் அணி இப்போது உலக சாம்பியனாக உருவெடுத்துள்ளது.

அவர்கள் இதேபோன்றதொரு சாதனையை 2010 ஆம் ஆண்டிலும் நிகழ்த்தியிருந்தனர், அது யூரோ 2008 ஐ வென்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்தது.

ஸ்பெயினின் இந்த வெற்றி, ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து விளையாட்டில் அவர்களின் அசாதாரணமான ஆதிக்கத்தைத் தொடர்ந்து நீட்டிக்கச் செய்கிறது.

ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக் கோப்பை பட்டங்களை ஒரே நேரத்தில் வைத்திருக்கும் முதல் நாடு ஸ்பெயின் தான். 2023-ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் மகளிர் அணி சாம்பியனானது.

By admin