• Tue. Jul 21st, 2026

24×7 Live News

Apdin News

‘முதல்வரை மிரட்டும் வகையில் பேச்சு’ – திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைதின் பின்னணி

Byadmin

Jul 21, 2026


'முதல்வரை மிரட்டும் வகையில் பேச்சு' - திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது பின்னணி

விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், கோவில்பட்டியில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக குறித்தும் சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.

இது சர்ச்சையான நிலையில், தூத்துக்குடி தவெக வடக்கு மாவட்ட செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் இன்று காலை காவல்துறையினர் மார்க்கண்டேயனை கைது செய்தனர்.

இதற்கு அவரது ஆதரவாளர்களும், திமுக தொண்டர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதலமைச்சரை மிரட்டும் வகையில் பேசியதாக, மார்க்கண்டேயன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவில்பட்டியில் கடந்த சனிக்கிழமை இரவு, திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

By admin