• Tue. Jul 21st, 2026

24×7 Live News

Apdin News

பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

Byadmin

Jul 21, 2026


காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இன்று 84-வது பிறந்தநாள். ஆனால் தான் பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை என்று அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நீட் தேர்வுக்காக காலவரையின்றி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் வாங்சுக் வலுக்கட்டாயமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கரப்பான்பூச்சி கட்சி சார்பில் நடத்தப்பட்ட அமைதியான ஜனநாயக போராட்டத்தை அரசு ஒடுக்கியதையும், தடியடி மற்றும் கண்ணீர்புகை குண்டு வீச்சுகளையும் நாடு நேற்று கண்டது. நீதி கோரிய மாணவர்கள் குரலுக்கு வன்முறைதான் பதிலாக கிடைத்தது. இத்தகைய வேதனையான சூழ்நிலையில் இன்று எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.

இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் முழுமையாக விவாதிக்க வேண்டும். மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தானாக பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும். மாணவர்களுக்கு தேவை நீதிதான். ஒடுக்குமுறை அல்ல.

இவ்வாறு கார்கே அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

By admin