பிஃபா உலகக்கோப்பை (FIFA World Cup) கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவிற்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றதைக் கொண்டாடிய போது நடந்த விபத்தில் 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினின் சியுடாட் ரோட்ரிகோ (Ciudad Rodrigo) நகரில் உள்ள ‘ஆர்போல் கார்டோ’ (Árbol Gordo) நீரூற்று அருகே திங்கட்கிழமை அதிகாலை ரசிகர்கள் திரண்டு வெற்றியைத் தாரை தப்பட்டை முழங்கக் கொண்டாடினர். அப்போது அந்த நீரூற்றின் மேல் தளத்தில் பலர் ஏறி நின்று கொண்டாடியபோது, அந்தத் தளம் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது.
இந்தக் கோர விபத்தில் படுகாயமடைந்த 13 வயது சிறுவன், சிகிச்சைக்காக உள்ளூர் சுகாதார மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு பரிதாபமாக உயிரிழந்தான். மேலும், இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
கொண்டாட்டமாக இருக்க வேண்டிய நிகழ்வு பேரிழப்பாக மாறியுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ள சியுடாட் ரோட்ரிகோ நகர சபை, சிறுவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த நகரில் மூன்று நாட்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், நகராட்சி அலுவலகங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் நேர்ந்த பெரும் சோகம்: 13 வயது சிறுவன் உயிரிழப்பு! appeared first on Vanakkam London.