• Tue. Jul 21st, 2026

24×7 Live News

Apdin News

விக்ரம்-1: இந்தியாவின் விண்வெளி லட்சியங்களை இந்த ஒரு ராக்கெட் எப்படி மாற்றியமைக்கும்?

Byadmin

Jul 21, 2026


ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏவுதளத்திலிருந்து சனிக்கிழமையன்று 'விக்ரம்-1' ஏவப்பட்டது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏவுதளத்திலிருந்து சனிக்கிழமையன்று ‘விக்ரம்-1’ ஏவப்பட்டது.

    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவது, ஒரு டாக்ஸியை அழைப்பது போல எளிதானதாக இருந்தால் எப்படி இருக்கும்?

இந்தியாவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று, சனிக்கிழமை தனது முதல் சுற்றுப்பாதை ஏவுதலை வெற்றிகரமாக முடித்ததன் பின்னணியில் இந்த தொலைநோக்குப் பார்வை உள்ளது.

சமீபத்தில் 1.1 பில்லியன் டாலர் மதிப்பீட்டை எட்டி, இந்தியாவின் முதல் விண்வெளித் தொழில்நுட்ப ‘யூனிகார்ன்’ நிறுவனமாக மாறிய ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்திலிருந்து ‘விக்ரம்-1’ ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.

ஏழு அடுக்கு மாடி உயரமுள்ள இந்த ராக்கெட், இந்திய நேரப்படி மதியம் 12:05 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 16 நிமிட பயணத்தில் 280 மைல்கள் (450 கி.மீ) பயணம் செய்து, அது பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையை அடைந்தது.

சுற்றுப்பாதையில் ராக்கெட்டைச் செலுத்திய முதல் இந்திய தனியார் நிறுவனம் ஸ்கைரூட் ஆகும். இதன் மூலம் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக, சுற்றுப்பாதையில் ராக்கெட்டுகளைச் செலுத்தக்கூடிய தனியார் நிறுவனத்தைக் கொண்ட மூன்றாவது நாடாக இந்தியா மாறியுள்ளது.

By admin