• Wed. Jul 22nd, 2026

24×7 Live News

Apdin News

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் – Vanakkam London

Byadmin

Jul 21, 2026


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்‌ஷ திடீர் விஜயமாக இந்தியாவுக்குச் சென்றுள்ளார். அவர் இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதேவேளை, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அழைப்பின் பேரில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.

புதுடெல்லி விஜயத்தை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பியதும், கொழும்பில் நடைபெறவுள்ள இந்த முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டத்தில் நாமல் ராஜபக்‌ஷவும் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது

By admin