• Wed. Jul 22nd, 2026

24×7 Live News

Apdin News

சிஜேபி போராட்டமும் அரசின் நடவடிக்கைகளும் – குழப்பத்தை ஏற்படுத்தும் 4 அம்சங்கள்

Byadmin

Jul 21, 2026


திங்கட்கிழமை அன்று, ஜேபி நட்டா சிஜேபி செய்தி தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரான்கா ஆகியோரைச் சந்தித்தார்

பட மூலாதாரம், @JPNadda

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் என்பது மிகவும் சாதாரணமான நிகழ்வாக இருந்து வருகின்றன.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் வலுவான மத்திய அரசின் ஆட்சிக் காலத்தில், அரசை உண்மையாகவே கவலைப்படுத்தும் அளவிலான போராட்டங்கள் மிகவும் குறைவாகவே நடந்துள்ளன.

காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி), சமூக வலைதளங்களின் மெய்நிகர் உலகத்திலிருந்து வெளிவந்து, அமைப்புச் சீர்திருத்தங்களை வலியுறுத்தும் இயக்கமாக மாறியுள்ளது.

சிஜேபி இயக்கத்தையும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மோடி அரசு இதுவரை கையாண்ட விதத்தைப் பார்க்கும்போது, இந்த இயக்கத்தின் தீவிரத்தை அரசு முழுமையாக உணரவில்லை என்றே தோன்றுகிறது.

இந்தப் போராட்டம் காலப்போக்கில் தானாகவே வலுவிழந்து மறைந்துவிடும் என்று அரசு கருதியதாகத் தெரிகிறது.

By admin