• Tue. Jul 21st, 2026

24×7 Live News

Apdin News

ஷெர்கார்: உலகின் மிக மதிப்புமிக்க பந்தயக் குதிரை கடத்தப்பட்டது எப்படி?

Byadmin

Jul 21, 2026


தீராத

பட மூலாதாரம், Alamy

    • எழுதியவர், கிரெக் ஹோக்விட்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மதிப்புமிக்க ஆண் குதிரையாக ஷெர்கார் திகழ்ந்தது.

1983-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி அன்று, அயர்லாந்தின் குதிரை வளர்ப்புப் பண்ணையிலிருந்து ஆயுதம் ஏந்திய நபர்கள் அந்தக் குதிரையைக் கடத்திச் சென்றபோது, பிபிசி ஒரு பரபரப்பான குற்றச் சம்பவத்தைப் பற்றி செய்தி வெளியிட்டது.

ஒரு குளிர்கால இரவில் ஷெர்கார் என்ற அந்தப் பரிசு பெற்ற ஆண் குதிரை, அயர்லாந்தில் உள்ள ஒரு குதிரை வளர்ப்புப் பண்ணையிலிருந்து திருடப்பட்டது.

“குதிரைப் பந்தய உலகில் அவ்வப்போது ஊக்கமருந்து அல்லது போட்டி முறைகேடு போன்ற சர்ச்சைகள் ஏற்படுவது புதிதல்ல. ஆனால், இது முற்றிலும் வேறுபட்ட சம்பவம்” என்று கூறிய பிபிசியின் நிக்கோலஸ் விட்செல், “ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று குதிரையை கடத்தி சென்றது ” என்றார்.

அப்போது, விளையாட்டு உலகில் அபார சாதனைகளை நிகழ்த்தியிருந்த ஷெர்கார், இனப்பெருக்கக் குதிரையாக தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருந்தது.

By admin