• Tue. Jul 21st, 2026

24×7 Live News

Apdin News

டெல்லி: சிஜேபி போராட்டம், விவசாயிகள் தடுப்பு – இரண்டாவது நாளாக என்ன நடக்கிறது?

Byadmin

Jul 21, 2026


டெல்லி சிஜேபி போராட்டம், விவசாயிகள் குற்றச்சாட்டு
படக்குறிப்பு, பஞ்சாப்-ஹரியானா எல்லையான ஷம்புவில் விவசாயிகளைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

டெல்லியில் சிஜேபி போராட்டத்தைத் தொடர்ந்து இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்த முன்மொழிவை எதிர்த்து விவசாய அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள மகாபஞ்சாயத்தும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு இடையேயான ஷம்பு எல்லையில் பெருமளவிலான காவல் படையினர் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, காகர் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், சிமெண்ட் தடுப்புகளும் வைக்கப்பட்டுள்ளன.

பஞ்சாப் விவசாயிகள் தலைவர் சர்வன் சிங் பாந்தர், செவ்வாய்க்கிழமை காலை ஷம்பு எல்லையில் விவசாயிகளைத் தடுத்ததற்காக ஹரியானா அரசைக் கடுமையாகச் சாடினார்.

முன்மொழியப்பட்டுள்ள இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெறவுள்ள கிசான் மகாபஞ்சாயத்தில் பங்கேற்கச் செல்லும் விவசாயிகளைத் தடுப்பதற்காகவே, ஷம்பு எல்லையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

By admin