• Thu. Nov 19th, 2026

24×7 Live News

Apdin News

உலகப் புகழ்பெற்ற ஈழத்து நவீன தமிழ்க் கவிஞர் சேரன் கனடாவில் காலமானார்

Byadmin

Nov 19, 2026


உலகின் சிறந்த நவீன தமிழ்க் கவிஞர்களில் ஒருவராகப் போற்றப்படும் ஈழத்துக் கவிஞர் சேரன் (வயது 66) காலமானார். சுகவீனம் காரணமாகக் கனடாவின் டொரோண்டோ நகரில் நேற்றிரவு அவர் உயிரிழந்துள்ளார்.

1960ஆம் ஆண்டு, இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அளவெட்டியில் பிறந்த இவர், கனடாவில் வசித்து வந்தார். கவிஞர் என்ற அடையாளத்தைத் தாண்டி சிறந்த கல்வியாளர், நாடக ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளராகவும் அவர் இலக்கிய மற்றும் கல்வித் துறைகளில் தடம் பதித்திருந்தார்.

15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள கவிஞர் சேரனின் படைப்புகள் 20 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது படைப்புகளில் இரண்டாவது சூரிய உதயம், கானல் வரி, எரிந்து கொண்டிருக்கும் நேரம் உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள் உலகத் தமிழ் இலக்கியப் பரப்பில் மிகவும் பிரபலம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

By admin