• Thu. Nov 19th, 2026

24×7 Live News

Apdin News

சாதனை படைத்து வரும் நடிகர் ‘உறியடி’ விஜயகுமாரின் ‘அறிவு’ படத்தின் டீசர்

Byadmin

Nov 19, 2026


‘உறியடி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் அறிமுகமாகி பிரபலமான நடிகர் ‘உறியடி’ விஜயகுமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அறிவு’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி,  குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டரை மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது.

இயக்குநர் சத்ய சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள :அறிவு’ திரைப்படத்தில் ‘உறியடி’ விஜயகுமார், ‘கயல்’ ஆனந்தி, எம். விஜயன், சிங்கம் புலி, தீபா சங்கர், கொலப்புளி லீலா, ஜோஷிகா மாயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தில் ராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மூவி ட்ரான் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சாய் வினோத் ஜெயக்குமார் தயாரித்திருக்கிறார்.‌

எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் மலைவாழ் மக்களின் கல்வி அறிவு தொடர்பாக ஆதிக்க சக்திகளுக்கும், பகுத்தறிவுவாதிகளுக்கும் இடையே நிகழும் உணர்வு பூர்வமான காட்சிகளாக இடம் பிடித்திருப்பதால்… படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

The post சாதனை படைத்து வரும் நடிகர் ‘உறியடி’ விஜயகுமாரின் ‘அறிவு’ படத்தின் டீசர் appeared first on Vanakkam London.

By admin