• Tue. Aug 11th, 2026

24×7 Live News

Apdin News

உலகின் பாதுகாப்பான 5 நாடுகள் எவை? அங்குள்ள வாழ்க்கை எப்படி இருக்கும்?

Byadmin

Aug 11, 2026


2026 ஆம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான நாடுகளில் வாழ்வது எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், லின்ட்சே கேலோவே
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இரண்டாம் உலகப் போருக்கு பின் எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு தற்போது உலகில் அதிகமான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும், ஐஸ்லாந்து, நியூசிலாந்து மற்றும் பிற சில நாடுகளின் குடியிருப்பவர்கள் அவர்களின் நாடுகள் ஏன் இவ்வளவு அமைதியானவை என்பதைக் கூறுகின்றனர்.

சமீபத்திய உலக அமைதி குறியீட்டின்படி, உலகம் கடந்த ஆண்டைவிட குறைவான அமைதியைக் கொண்டதாக மாறியுள்ளது. மொத்தத்தில், 99 நாடுகளில் அமைதித் தன்மை குறைந்துள்ளது. இதன் மூலம், உலகளாவிய அமைதி தொடர்ந்து 12-ஆவது ஆண்டாக சரிவடைந்துள்ளது.

எனினும், மோசமடைந்து வரும் சூழ்நிலைக்கு மத்தியிலும், ஒரு சிறிய அளவிலான நாடுகள் தொடர்ந்து தனித்து நிற்கின்றன.

“இந்த துயரத்திற்குரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும், தரவரிசையின் உச்சியில் உள்ள நாடுகளை அது உண்மையில் பாதிக்கவில்லை,” என்று 2007-ஆம் ஆண்டு இந்த குறியீட்டை உருவாக்கிய பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான அமைப்பின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் ஸ்டீவ் கில்லிலியா கூறினார்.

இந்த குறியீடு 163 நாடுகளை 23 அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடுகிறது. அதில் ராணுவச் செலவு, நடைபெற்று வரும் மோதல்கள், கொலை விகிதங்கள், பாதுகாப்பு குறித்த மக்களின் உணர்வுகள் போன்றவை அடங்கும். சிறந்த தரவரிசையைக் பெறும் நாடுகளில் பொதுவாக வன்முறை குறைவாக இருக்கும். திறம்பட செயல்படும் அமைப்புகள், உயர்ந்த சமூக நம்பிக்கை, அண்டை நாடுகளுடன் நல்ல உறவுகள் மற்றும் உயர்ந்த வாழ்க்கைத் தரம் காணப்படும்.

By admin