பரவும் அபாயம் குறைவு:
எபோலா வைரஸ் காற்று வழியாக பரவாது என்பதால், சுவாச மண்டலத்தை தாக்கும் வைரஸ்களை விட இது பரவுவது மிகவும் கடினம். எனவே, இதன் உலகளாவிய பரவல் அபாயம் குறைவு என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பிடுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெளியே கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு, நோய் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மே 15-ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட இந்த பாதிப்பு, முந்தைய எபோலா பாதிப்புகளில் இருந்து மாறுபட்டது. ஏனெனில், இதற்கு காரணமான அரிதான ‘புண்டிபுக்யோ’ (Bundibugyo) வைரஸ்-க்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இல்லை.
ஆரம்பக்கட்ட சோதனைகள் மிகவும் பொதுவான வகை எபோலா வைரஸ்க்காக மேற்கொள்ளப்பட்டதே தாமதத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது.