• Tue. Aug 25th, 2026

24×7 Live News

Apdin News

உலகின் வண்ணமயமான 8 கட்டடங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள தமிழக கோயில் எது?

Byadmin

Aug 25, 2026


வண்ணமயமான கட்டடம்

பட மூலாதாரம், Pompidou Centre, Malaga/ Getty Images

    • எழுதியவர், கிளேர் டௌடி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கற்பனைத்திறன் மிக்க கட்டடக் கலைஞர்கள் நீண்ட காலமாகவே தங்களது படைப்புகளை மேலும் சிறப்பாக்க வண்ணங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். பிரமிக்க வைக்கும் பழமையான கோயில் முதல் வண்ணமயமான நூலகம் வரை, வண்ணம் கட்டடக் கலையின் முக்கிய அங்கமாக விளங்கும் எட்டு கட்டடங்கள் இவை.

மனிதர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வண்ணங்களைப் பயன்படுத்தத் தொடங்கி பல நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆரம்பகால நியாண்டர்தால் மனிதர்கள் பூமியிலிருந்து கிடைத்த இயற்கை நிறமிகளைப் பயன்படுத்தி குகைச் சுவர்களை அலங்கரித்தனர். அதைத் தொடர்ந்து பண்டைய எகிப்து மற்றும் கிரேக்கத்தின் பல வண்ணக் கோயில்களும், பண்டைய ரோமின் பல வண்ணப் பளிங்குக் கற்களால் உருவாக்கப்பட்ட கட்டடங்களும் தோன்றின. அந்தக் காலகட்டங்களில், எங்கு பார்த்தாலும் வண்ணத்துக்கு முக்கியத்துவம் இருந்தது.

இடைக்கால தேவாலயங்களின் வண்ணக் கண்ணாடி வேலைப்பாடுகளிலும், இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தின் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட மேற்கூரைகள் மற்றும் சுவர்களிலும் வண்ணம் முக்கியப் பங்கு வகித்தது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 21ஆம் நூற்றாண்டின் பிரகாசமான, பளபளப்பான கட்டடங்களிலும் வண்ணம் முக்கியத்துவம் பெற்றது. இதற்கு ஓர் உதாரணம், டேனியல் புரென் வடிவமைத்த மலாகாவில் உள்ள பொம்பிடூ (Pompidou) மையத்தின் கனசதுர வடிவ நுழைவாயில். இது வண்ணமும் ஒளியும் இணைந்த ஓர் இசைக்கோவை போன்றது.

“ஒரு கட்டடத்தை வேறு எந்த வகையிலும் அடைய முடியாத அளவுக்கு ஆழமான தாக்கத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் உயரத்துக்கு கொண்டு செல்வதில் வண்ணமே முக்கியக் கூறு” என்கிறார்கள் வடிவமைப்பாளர் ஆடம் நதானியல் ஃபர்மன் மற்றும் எழுத்தாளர் கேட் மசாடே. இவர்கள் எழுதிய ‘வண்ணக் கட்டடக்கலை – வடிவமைப்பில் வண்ணக் கலைத்திறன்’ (Chromatic Architecture – the Craft of Colour in Design) என்ற நூலில் இதைக் குறிப்பிடுகின்றனர்.

அவர்களின் புதிய நூலில் இடம்பெற்றுள்ள வண்ணமயமான எட்டு கட்டடங்கள் இவை. வண்ணத்தை அதிக துடிப்புடனும் துணிச்சலுடனும் பயன்படுத்த கட்டடக் கலைஞர்களுக்கு இந்தக் கட்டடங்கள் அழைப்பு விடுக்கின்றன. அதேபோல், வண்ணம் எத்தகைய சாத்தியங்களை உருவாக்க முடியும் என்பதையும் நாம் திறந்த மனதுடன் பார்க்க வேண்டும்.

By admin