• Tue. Aug 25th, 2026

24×7 Live News

Apdin News

IND Vs SL: ஜெய்ஸ்வால், அசிதா பெர்னாண்டோவுக்கு அபராதம் ஏன்? – களத்தில் என்ன நடந்தது?

Byadmin

Aug 25, 2026


முதல் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ரன்கள் எடுத்தார்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, முதல் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ரன்கள் எடுத்தார்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது ஏற்பட்ட மோதல் சம்பவத்துக்காக இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ ஆகியோருக்கு ஐசிசி, அவர்களது போட்டி ஊதியத்தில் 25% அபராதம் விதித்துள்ளது.

இதனுடன், இரு வீரர்களுக்கும் தலா ஒரு டிமெரிட் புள்ளியையும் ஐசிசி வழங்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், ஜெய்ஸ்வால் 45 ரன்களில் அசிதா பெர்னாண்டோவின் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனபோது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த மோதல் குறித்து பேசிய ஜெய்ஸ்வால், இந்தச் சம்பவம் குறித்து ஒரு தீர்மானத்துக்கு வருவதற்கு முன்பு பெர்னாண்டோ தன்னிடம் என்ன கூறினார் என்பதைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை இந்தியா வீழ்த்தியது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

By admin