• Tue. Aug 25th, 2026

24×7 Live News

Apdin News

தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை எப்படி ஆள்கிறார்கள்? பிபிசி நேரில் கண்டது என்ன?

Byadmin

Aug 25, 2026


தாலிபன்களுக்காகப் போராடிய ஜவ்ஸ்ஜான் மாகாண ஆளுநர் அப்துல்லா சர்ஹாதி
படக்குறிப்பு, தாலிபன்களுக்காகப் போராடிய ஜவ்ஸ்ஜான் மாகாண ஆளுநர் அப்துல்லா சர்ஹாதி, அமெரிக்காவின் குவாண்டனாமோ பே தடுப்பு முகாமில் பல ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

    • எழுதியவர், கவூன் கமூஷ்
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

ஆளுநர் அப்துல்லா சர்ஹாதி, உடைந்த கையுடன் இருக்கும் ஒரு சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பணம் வழங்குகிறார்.

மேலும், உள்ளூர் மசூதிக்காகவும் நிதியுதவி செய்கிறார்.

அதன்பிறகு, வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள அவரது அலுவலகத்தில் ஆச்சரியமளிக்கும் ஒரு உரையாடல் நடைபெறுகிறது.

இளம் பெண் ஒருவர், முன்னாள் தாலிபன் தளபதியும் நரைத்த தாடியுடன் இருப்பவருமான ஆளுநர் அப்துல்லா சர்ஹாதியிடம், தனது கணவரை விவாகரத்து செய்ய விரும்புவதாகக் கூறுகிறார்.

பல மாதங்களாக தனது கணவர் தன்னைத் துன்புறுத்தி அடித்து வந்ததாக அவர் குற்றம்சாட்டுகிறார்.

By admin