• Wed. Aug 19th, 2026

24×7 Live News

Apdin News

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: பிவி சிந்து 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

Byadmin

Aug 19, 2026


உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி உள்ளரங்கில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, கனடாவின் வென் யூ ஜாங் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் உன்னதி ஹூடா 21-11, 9-21, 21-23 என்ற செட் கணக்கில் கனடாவின் மிச்செல்லி லீயிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin