11
பங்களாதேஷ் நாட்டில் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் எவ்வாறாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்பது தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று, எனது கருத்துகளையும் பதிவு செய்தேன்.
இதில் இலங்கையிலும் ஊடகவியலாளர்கள் சுதந்திரக் கட்டுப்பாடுகள் எவ்வாறாக உள்ளது கடந்த 80 வருடங்களாக ஊடகவியலாளர்கள் பிரச்சனையில் இலங்கையை ஒர் உதாரணமாக எடுத்து ஆய்வுகளை செய்ய வேண்டும் என்றும் இதனை தென்னாசிய ஊடகவியலாளர்கள் பார்வையில் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தேன்.
மேலும் அந்த உரையாடலின் போது, ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் ஏன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதையும், ஒவ்வொருவரும் மற்றவர்களின் பிரச்சனைகளை ஏன் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்தினேன்.
மேலும், இன்றைய தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான வளர்ச்சிகள் எதிர்காலத்தில் உலகளாவிய ரீதியில் மக்களுக்கும் குறிப்பாக இளைய தலைமுறைக்கும் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் எடுத்துரைத்தேன்.

அதோடு: அ) நாடுகளின் பொறுப்பு ஆ) அரசியல் தலைவர்களின் பொறுப்பு இ) மக்களின் பொறுப்பு ஈ) சமூகத்தின் பொறுப்பு உ) இளைய தலைமுறையின் பொறுப்பு ஊ) ஊடகங்களின் பொறுப்பு எ) ஊடகவியலாளர்களின் பொறுப்பு என பல்வேறு பரிமாணங்களில் பொறுப்புணர்வின் அவசியத்தை எனது உரையில் விரிவாக பகிர்ந்துகொண்டேன்.
நிலா பாலா (சிறுதுளிகள்)
பெரிய பிரித்தானியா