• Tue. Nov 24th, 2026

24×7 Live News

Apdin News

என்விடியா சிஇஓ-வாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம் – டிரம்ப், ஈலோன் மஸ்க் கூறியது என்ன?

Byadmin

Nov 24, 2026


என்விடியா சிஇஓ-வாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம் - டிரம்ப், ஈலோன் மஸ்க் கூறியது என்ன?

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் காதல் சர்ச்சையால் தொழில்நுட்ப நிறுவனமான என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகிய ஜென்சன் ஹுவாங் மீண்டும் அதே பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். என்விடியா நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் ஒருமனதாக முடிவின்படி, ஜென்சன் ஹுவாங் மீண்டும் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் அதே பதவியில் நியமிக்க நிர்வாகக் குழு ஒருமனதாக வாக்களித்ததாக, என்விடியா நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“என்விடியா நிறுவனத்தை வழிநடத்த ஜென்சனே சரியான நபர் என்றும், அவரை மீண்டும் நியமிப்பது பங்குதாரர்கள், ஊழியர்கள், கூட்டாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலனுக்கு உகந்தது என்றும் நிர்வாகக் குழு நம்புகிறது” என்று அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஹுவாங்கை அதே பதவியில் மீண்டும் அமர்த்துவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று நிர்வாகக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. “இந்த முடிவை எடுக்கும் செயல்முறையின் போது, அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளிடம் இருந்து நிர்வாகக் குழு கருத்துகளைப் பெற்றது. அந்தக் கருத்துகளின் அடிப்படையில், ஹுவாங்கை மீண்டும் பதவியில் அமர்த்துவது தேசியப் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று நிர்வாகக் குழு உறுதியாக நம்புகிறது.” என்று என்விடியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜென்சன் ஹுவாங் அறிக்கை

ஜென்சன் ஹுவாங்கின் அறிக்கை தற்போது என்விடியா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

By admin