• Tue. Nov 24th, 2026

24×7 Live News

Apdin News

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் தின பதாகைகள் அகற்றம்

Byadmin

Nov 24, 2026


கிளிநொச்சி டிப்போ சந்திப் பகுதியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் வீதி வளைவுகள் நள்ளிரவு வேளையில் காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அகற்றப்பட்ட பதாகைகள் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைதானவர்கள் விடுவிப்பு

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அங்கிருந்தவர்களுடன் முரண்பட்டதுடன், தகாத மற்றும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் தின பதாகைகள் அகற்றம் | Banners Removed In Kilinochchi

மேலும், எட்டுப் பேரையும் கைது செய்தபோது, “பயங்கரவாதிகளை நினைவுகூர்வதற்கு இங்கு எவருக்கும் இடமில்லை” என காவல்துறையினர் தெரிவித்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கைது செய்யப்பட்ட எட்டு பேரிடமும் காவல் நிலையத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், அவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், காவல் நிலையத்திற்கு எப்போது அழைத்தாலும் வரவேண்டும் என்றும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்குச் சமூகமளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளை, அகற்றப்பட்ட நினைவுப் பதாதைகள் காவல்துறையினரின் வசம் இருப்பதாகவும், அவற்றை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin