11
துறைமுக நிலையம் ஒன்றிலிருந்து ஏலத்தில் வாங்கப்பட்ட எரிபொருள் தாங்கியை வெட்டித் தயாரித்தபோது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் மூன்று ஊழியர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது பாதுக்கை- மீபே பகுதியில் (30) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொழிற்சாலையில் மசகு எண்ணெய் சேமிப்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பயன்படுத்தப்பட்டு பின்னர் ஏலத்தில் எடுக்கப்பட்ட குறித்த தாங்கியை அதற்குள் எஞ்சியிருந்த எரிபொருளை வெளியேற்றாமல் எரிவாயு மூலம் வெட்டித் தயாரித்தபோதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த வெடிப்பச் சம்பவத்தின் காரணமாக அருகில் இருந்த வீடு ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்தில் இரண்டு ஆண் ஊழியர்கள் காயமடைந்ததோடு வெடிப்பு நிகழ்ந்த போது தலைமீது ஓடு விழுந்ததில் பெண் ஊழியர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.