• Sat. Oct 31st, 2026

24×7 Live News

Apdin News

கிறிஸ்டா பைக்: அமெரிக்காவில் இருமுறை மரண ஊசி செலுத்தியும் உயிர் பிழைத்த பெண் கூறியது என்ன?

Byadmin

Oct 31, 2026


அமெரிக்காவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள கிறிஸ்டா பைக், கடந்த செப்டம்பரில் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் முயற்சி தோல்வியடைந்த பிறகு, முதல்முறையாகப் பொதுவெளியில் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

படக்குறிப்பு, 50 வயதான பைக், பென்டோபார்பிட்டால் என்ற மருந்தின் இரண்டு மரண ஊசிகளிலிருந்து உயிர் தப்பினார்

    • எழுதியவர், அனா ஃபாகி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அமெரிக்காவில் கடந்த செப்டம்பரில் மரண தண்டனையை நிறைவேற்றும் முயற்சி தோல்வியடைந்த பிறகு, கிறிஸ்டா பைக், முதல்முறையாகப் பொதுவெளியில் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

“அன்றிரவு முதல், நான் வலியில்லாமல் இருந்த ஒரு கணம் கூட இல்லை,” என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

“என் உடல் வலிக்கிறது. என் கைகள் வலிக்கின்றன. என் தொண்டை வலிக்கிறது. பேசுவதற்கு நான் இன்னும் சிரமப்படுகிறேன். இந்த வலி உடல் ரீதியானது மட்டுமல்ல. என் மனதிலும் என் ஆன்மாவிலும் வலி இருக்கிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

50 வயதான பைக், பென்டோபார்பிட்டால் என்ற மருந்தின் இரண்டு மரண ஊசிகளிலிருந்து உயிர் தப்பிய பிறகு, கடந்த மாத இறுதியில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த ஊசிகள் அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆழ்த்தியிருந்தன.

அதன்பிறகு, கடந்த 30 ஆண்டுகளாக அவர் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கே மீண்டும் அனுப்பப்பட்டுள்ளார். 1995-ஆம் ஆண்டு கொலீன் ஸ்லெம்மர் என்பவரைக் கொலை செய்ததற்காக அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.



By admin