பிரமாண்ட நிகழ்வு:
‘டோரண்ட் பார்மாசூட்டிகல்ஸ்’ நிறுவனத்தின் தலைவரான ஜினல் மேத்தா, ‘குஜராத் டைட்டன்ஸ்’ அணியின் தலைவராக உள்ளார். அனன்யா பிர்லா, ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு’ அணியின் உரிமையாளர் குழுமத்துடன் தொடர்புடையவர்.
2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கான இந்த ஏற்பாட்டு குழுவில் மொத்தம் 12 முதல் 15 உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகமதாபாத் நகரம் இந்த போட்டிகளை நடத்துவதற்கான உரிமையை பெற்றதை தொடர்ந்து, இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்த குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
நிதி நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் மிக சுருக்கமாக நடத்தப்பட்டன. ஆனால், அகமதாபாத்தில் நடைபெறவுள்ள போட்டிகள் பிரமாண்டமான நிகழ்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.