• Sat. Oct 31st, 2026

24×7 Live News

Apdin News

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

Byadmin

Oct 31, 2026


திரைப்படம், நாடகம் மற்றும் சின்னத்திரை என பல்வேறு துறைகளில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார்.

திரைப்படம் மாத்திரமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது மக்களின் அஞ்சலிக்காக பல்லாவரத்தில் அவரது வீட்டின் அருகே வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வத்சலா திருவனந்தபுரத்தில் பிறந்து வளந்தவர் . பாடசாலையில் கல்வி கற்கும் போதே நடனத்தில் ஆர்வம் கொண்டுள்ளார். திருமணத்துக்குப் பின், 1953ல் சென்னைக்குக் குடிபெயர்ந்துள்ளார்.

அவர் வேலை செய்த அலுவலகத்திலேயே இயக்குநர் கே. பாலசந்தரும் பணியாற்றியுள்ளார். கார்டூனிஸ்ட் ஸ்ரீதரன் நடத்திய ரசிக ரங்கா எனும் தியேட்டர் குரூப்பில் இணைந்து நடித்துள்ளார்.

அவரது நாடக மேடையில் கவனம் ஈர்த்ததால் இயக்குநர் மணி ரத்னம் அவரை ரோஜா படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்போது அவருக்கு 60 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

400 திரைப்படங்களுக்கு மேலாக சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதில் சதீலீலாவதி, ரிதம், ரோஜா, அந்நியன், வின்னர், பட்டியல் என பல படங்களில் நடித்துள்ளார்.

தொலக்காட்சிகளில் சித்தி, ஆனந்தம், முந்தானை முடிச்சு, வசந்தம் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். பாலுமகேந்திராவின் கதை நேரம் குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

The post பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்! appeared first on Vanakkam London.

By admin