• Sat. Oct 10th, 2026

24×7 Live News

Apdin News

எலான் மஸ்க்கிற்கு அமெரிக்காவின் உயரிய அறிவியல் பதக்கம் வழங்கி கௌரவிப்பு: ஜனாதிபதி ட்ரம்ப் புகழாரம்

Byadmin

Oct 10, 2026


ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, ஸ்டார்லிங்க் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் உரிமையாளரும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க்கிற்கு அமெரிக்காவின் உயரிய ‘தேசிய அறிவியல் பதக்கம்’ (National Medal of Science) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள அமைதிக்கான நிறுவனத்தில் நேற்று இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த விருதை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எலான் மஸ்க்கை நவீன காலத்து தோமஸ் அல்வா எடிசன் என்றும், அறிவாற்றல் மிக்க ஜீனியஸ் என்றும், தேசத்தின் பொக்கிஷம் என்றும் வர்ணித்துப் பாராட்டினார். அவரைப் போன்று வேறு எவரும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், விண்வெளித் தொழில்நுட்பம், செய்மதித் தொலைத்தொடர்பு மற்றும் பல்வேறு துறைகளில் எலான் மஸ்க் ஆற்றிவரும் அளப்பரிய பங்களிப்புக்களையும் அமெரிக்க ஜனாதிபதி இதன்போது விசேடமாகப் பாராட்டிப் பேசினார்.

By admin