• Tue. Oct 6th, 2026

24×7 Live News

Apdin News

எஸ்ஐஆர் படிவம்-6 பற்றிய உச்சநீதிமன்ற கருத்தால் தேர்தல் ஆணையத்திற்கு புதிய நெருக்கடி – அடுத்தது என்ன?

Byadmin

Oct 6, 2026


எஸ்ஐஆர்: படிவம்-6 பற்றிய உச்சநீதிமன்ற கருத்தால் தேர்தல் ஆணையத்திற்கு புதிய நெருக்கடி - அடுத்தது என்ன?

வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் ‘படிவம் 6’ குறித்து உச்ச நீதிமன்றம் திங்களன்று ஒரு முக்கிய கருத்தைத் தெரிவித்தது.

‘பார் அண்ட் பெஞ்ச்’ மற்றும் ‘லைவ் லா’ ஆகியவற்றின் தகவல்படி, “உச்ச நீதிமன்றம் படிவம் 6-ன் எந்தவொரு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திற்கும் ஒப்புதல் அளிக்கவில்லை” என்று விசாரணையின் போது இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறினார்.

“நாங்கள் மாற்றியமைக்கப்பட்ட எந்த ‘படிவம் 6’-க்கும் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தெளிவானது,” என்று அவர் கூறினார்.

ஆவணங்கள் கிடைத்தவுடன், அந்தப் படிவத்தில் மாற்றங்களைச் செய்தது யார் என்பதைப் பார்க்க விரும்புவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் 26 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட பத்திரிகை அறிக்கை குறித்து சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

By admin