• Sat. Jun 13th, 2026

24×7 Live News

Apdin News

எஸ்.பி. வேலுமணி எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் சேர்ந்த பிறகும் கிடைக்காத கட்சிப் பதவி – இனி அரசியல் எதிர்காலம் என்ன?

Byadmin

Jun 9, 2026


பறிபோன கட்சிப்பதவி: அதிமுகவிலிருந்து பிரிந்து சேர்ந்த வேலுமணி தரப்பின் எதிர்காலம் என்ன?

பட மூலாதாரம், X/@AIADMKOfficial

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து, மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்ட அதிமுகவிலிருந்து பலரும் விலகி, தமிழக வெற்றிக்கழகத்தில் சேர்ந்துள்ளனர். 4 அதிமுக உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் போன்றோர் எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் சேராமலும், தவெகவிலும் இணையாமலும் உள்ளனர்.

இப்போதைக்கு அமைதியாக இருக்க விரும்புவதாக பிபிசியிடம் கூறினார் சி.வி.சண்முகம். வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், காமராஜ் உள்ளிட்ட பல அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்துவிட்ட நிலையில் அவர்களின் கட்சிப்பதவிகள் மீண்டும் வழங்கப்படவில்லை.

இதுபற்றி வேலுமணி தரப்பில் யாரும் பேச முன்வரவில்லை. வேலுமணிக்குப் பதிலாக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செ.ம.வேலுச்சாமி, தனக்கு எல்லோரும் ஆதரவளித்துவருவதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

”அதிமுக மிகவும் பலவீனமடைந்துள்ள நிலையில், இருக்கும் கட்சியைக் காப்பாற்றுவதற்கு மீண்டும் இணைந்தவர்களுக்கு பதவி வழங்குவது அவசியம்” என்கிறார் திராவிட இயக்க ஆய்வாளர் துரை கருணா.

By admin