• Sat. Jul 25th, 2026

24×7 Live News

Apdin News

ஏஐ முகத்தை உங்களால் அடையாளம் காண முடியுமா? இணைய உலகில் அதிகரிக்கும் புதிய சவால்

Byadmin

Jul 25, 2026


பக்கவாட்டில் அருகருகே அமைக்கப்பட்ட தத்ரூபமாகத் தோன்றும் இரண்டு மனிதர்களின் உருவப்படங்கள்.

பட மூலாதாரம், ANU (left; generated using StyleGAN3) / Igor Alecsander via Getty Images (right)

படக்குறிப்பு, பக்கவாட்டில் அருகருகே அமைக்கப்பட்ட தத்ரூபமாகத் தோன்றும் இரண்டு மனிதர்களின் உருவப்படங்கள். இடதுபுறத்தில் ஒரு ஆணும், வலதுபுறத்தில் ஒரு பெண்ணும் உள்ளனர்.

    • எழுதியவர், கேத்தரின் ஹீத்வுட்
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

2024-இல் ரகசியமாக நிறுவனம் ஒன்றை வாங்குவது குறித்து விவாதிப்பதற்காக, ஹாங்காங்கைச் சேர்ந்த நிதித் துறை ஊழியர் ஒருவர், ‘ஆரப்’ என்ற பொறியியல் நிறுவனத்தில் பணியாற்றும் சக ஊழியர்களுடன் வீடியோ காலில் இணைந்தபோது, சந்தேகப்படும்படியாக எதுவும் தோன்றவில்லை.

2.5 மில்லியன் டாலர் நிதியை அனுப்பிய பிறகு தான், தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார்.

அந்த வீடியோ காலில் இருந்த தலைமை நிதி அதிகாரி என்று கருதப்பட்டவர் உட்பட, மற்ற அனைவருமே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி உருவங்கள் (Deepfakes) என தெரிய வந்தது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட முகங்களை உண்மையான மனிதர்களிடம் இருந்து பிரித்து அறிவது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (Generative AI) மூலம் செய்யப்படும் மோசடிகள் அடுத்த ஆண்டிற்குள் அமெரிக்காவிற்கு மட்டுமே 4,000 கோடி டாலர் (40 பில்லியன்) இழப்பை ஏற்படுத்தும் என டெலாய்ட் என்ற ஆலோசனை நிறுவனத்தின் 2024 அறிக்கை கணித்துள்ளது.

By admin