• Wed. Sep 16th, 2026

24×7 Live News

Apdin News

ஐசிசி டி20 தரவரிசை: நம்பர் 2 இடம் பிடித்த அபிஷேக் சர்மா

Byadmin

Sep 16, 2026


ஐசிசி வெளியிட்டுள்ள டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா ஒரு இடம் முன்னேறி நம்பர் 2 இடம் பிடித்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. துபாயில் வெளியிட்டது.

அபிஷேக் சர்மா முன்னேற்றம்

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா ஒரு இடம் முன்னேறி 862 புள்ளிகளுடன் நம்பர் 2 இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 82 ரன் விளாசினார்.

மற்றொரு இந்திய வீரரான இஷான் கிஷான் (913 புள்ளி) நம்பர் 1 இடத்தில் நீடித்து வருகிறார். திலக் வர்மா (740 புள்ளி) ஒரு இடம் சரிந்து 8வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்தியாவின் சஞ்சு சாம்சன் (599) 30வது இடத்துக்கு முன்னேறினார். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் (603), 29வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இதேபோல், பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 7-வது இடத்தில் இருந்து நம்பர் 5 இடத்துக்கு முன்னேறினார்.

பும்ரா 7 இடம் முன்னேறி அசத்தல்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 17-வது இடத்தில் இருந்து 10-வது இடத்துக்கு முன்னேறி அசத்தினார்.

மற்றொரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் (642) 25வது இடத்தில் இருந்து 14வது இடத்தை தட்டிச் சென்றார்.முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (744) தொடர்கிறார்.

By admin