• Tue. Jul 14th, 2026

24×7 Live News

Apdin News

ஐரோப்பாவில் பிரிவினையை ஏற்படுத்துவதாக ரஷ்ய சைபர் நெட்வொர்க்குகள் மீது குற்றச்சாட்டு!

Byadmin

Jul 14, 2026


ஐரோப்பா முழுவதும் குழப்பத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்த முயன்றதாகக் குற்றம் சாட்டி, ரஷ்ய சைபர் நெட்வொர்க்குகளை (cyber networks) இலக்காகக் கொண்ட புதிய தடைகளின் தொகுப்பை இங்கிலாந்து வெளியிட்டுள்ளது.

“ரஷ்ய உளவுத்துறை அமைப்புகளுடன் தொடர்புடைய பிராக்சி நெட்வொர்க்குகளில் (proxy networks) ஈடுபட்டுள்ள சைபர் குற்றவாளிகள் உட்பட, அழிவுகரமான சைபர் மற்றும் கலப்பின செயல்பாடுகளுக்குப் (hybrid operations) பின்னால் இருக்கும் 24 தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை இன்றைய நடவடிக்கை இலக்காகக் கொண்டுள்ளது” என்று அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அரசாங்கத்தின் இந்தத் தடைகள், ஐரோப்பிய ஒன்றியத்துடன் (European Union) ஒருங்கிணைந்து அறிவிக்கப்பட்டுள்ளன.

இலண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம், இந்தத் தடைகளை சட்டவிரோதமானது என்று நிராகரித்துள்ளது. சைபர் தாக்குதல்கள், தவறான தகவல் பரப்பும் பிரச்சாரங்கள் மற்றும் ஏயை நாடுகளின் அரசியல் செயல்முறைகளில் தலையீடு செய்தல் போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி, இங்கிலாந்து தங்களை நியாயப்படுத்த முயல்வதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

By admin