• Wed. Jul 15th, 2026

24×7 Live News

Apdin News

சேலத்தில் 5 ஆண்டுகளாக தகரத்தால் மூடப்பட்ட அம்பேத்கர் சிலையால் தற்போது என்ன பிரச்னை?

Byadmin

Jul 14, 2026


அம்பேத்கர் சிலை
படக்குறிப்பு, அம்பேத்கர் சிலை

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சேலம் மாவட்டத்திலுள்ள ஒதியத்தூர் என்ற கிராமத்தில் அம்பேத்கர் சிலை தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு, பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. அம்பேத்கர் கால் மேல் கால் போட்டுக்கொண்டு நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற அந்த சிலையை அகற்ற வேண்டுமென்று ஒரு தரப்பினரும், அதே இடத்தில் அதைத் திறக்க வேண்டுமென்று பட்டியலின சமுதாயத்தினரும் போராடி வருகின்றனர்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட தகரங்களை அகற்றியதைக் கண்டித்து ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடந்துள்ளது. இதனால் பட்டியல் பிரிவைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சுமூகமான முடிவு எடுக்கப்படும் வரை அங்கு காவல்துறை பாதுகாப்பு தொடருமென்றும், தற்போது அங்கு எந்த பிரச்னையுமில்லை என்றும் மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி பிபிசியிடம் தெரிவித்தார்.

அம்பேத்கர் சிலை

அம்பேத்கர் சிலையின் வடிவமைப்பால் மோதலா?

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமம் ஒதியத்தூர். அங்குள்ள பிரதான பேருந்து நிறுத்தப்பகுதியில் காமராசர், ராஜிவ் காந்தி ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2021 ஆம் ஆண்டில் அங்கு அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாற்காலியில் கால் மேல் கால் போட்டபடி அம்பேத்கர் அமர்ந்து இருப்பது போன்றும், ஒரு சட்டப்புத்தகம் இருப்பது போன்றும் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

By admin